Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் காலமானார்

ஆகஸ்டு 27, 2020 05:16

திருச்சி: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 78. திருச்சி தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. சட்ட ஆணையத்தின் தலைவராகவும் முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இருந்தவர் ஏ.ஆர்.லட்சுமணன். பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தவர். 

இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு மீனாட்சி ஆச்சி என்ற மனைவியும் ஏ.ஆர்.அருணாச்சலம், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் என்ற இரு மகன்களும், உமையாள், சொர்ணவள்ளி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். அதில், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் சீனியர் வக்கீலாகவும், சென்னை பார் அசோசியேசன் தலைவராகவும் உள்ளார்.

இவர்கள் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் வசித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்னதாக  ஏ.ஆர்.லட்சுமணனின் மனைவி மீனாட்சி உடல்நலக்குறைவு காரணமாக காரைக்குடியில் மரணமடைந்தார். அவரது உடல் தேவக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் நடந்தது. இந்நிலையில் இன்று காலை திருச்சி தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு இருந்த ஏ.ஆர். லட்சுமணன்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் தேவக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.

தலைப்புச்செய்திகள்