Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜிமெயில் கணக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் முடக்கம்

ஆகஸ்டு 20, 2020 03:54

புதுடில்லி: பிரபல ஆன்லைன் நிறுவனமான கூகுளின் ஜிமெயில் கணக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்று (ஆக.,20) முடங்கியது \பயனாளிகள் தங்களது ஜிமெயில் கணக்கில் லாக் இன் செய்ய முடியவில்லை என்றும் மெயிலுடன் படங்கள், பைல்கள் போன்ற விஷயங்களை இணைத்து அனுப்ப முடியவில்லை என்று தெரிவித்தனர்.

இந்தியாவில் இன்று காலை 11 மணி முதல் ஜிமெயில் முடங்கி உள்ள நிலையில் ஆஸி., ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் இச்சேவை முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஜிமெயில் உபயோகிப்பவர்களில் 62 சதவீதம் பேருக்கு அட்டாச்மென்ட் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 27 சதவீதம் பேருக்கு தங்கள் கணக்கை லாக் இன் செய்ய முடியவில்லை என்றும் 10 சதவீதம் பேருக்கு தங்களால் மின்னஞ்சல்களை பெற முடியவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

ஒரு எம்.பி.,க்கும் குறைவான சிறிய படங்களைக் கூட பதிவேற்றம் செய்ய 15 நிமிடங்கள் ஆவதாக கூறினர். இரண்டாவது முறை பட்டனை அழுத்தினால் பக்கம் துண்டிக்கப்படுவதாக குறை கூறி உள்ளனர்.

இதனிடையே இப்பிரச்னை தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும். அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், உபயோக்கிப்பாளர்கள் பொறுமை காக்கும் படியும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

 

தலைப்புச்செய்திகள்