Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜம்மு-காஷ்மீர் புதிய துணைநிலை கவர்னராக மனோஜ் சின்ஹா நியமனம்

ஆகஸ்டு 06, 2020 06:36

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் ஜி.சி.முர்மு, தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய துணைநிலை கவர்னராக மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 5ல், ரத்து செய்யப்பட்டது. அதன் பின், ஜம்மு -- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை, தனித்தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னராக பதவி வகித்து வந்த முர்மு தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும், தனது ராஜினாமா கடிதத்தையும் ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டதாகவும் நேற்று தகவல்கள் வெளியானது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை கவர்னராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். முர்முவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புதிய கவர்னரை நியமித்துள்ளார். 61 வயதான மனோஜ் சின்ஹா உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், காசியாப்பூர் மக்களவை தொகுதியில் பாஜ.,வில் சார்பில் போட்டியிட்டு, மூன்று முறை எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார். மேலும், ரயில்வே மற்றும் தொழில்நுட்ப துறையில் இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்