Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாதுகாவலர் மோடி: எதிர்க்கட்சிகள் விமர்சனம்

மார்ச் 18, 2019 06:53

புதுடில்லி : பிரதமர் மோடி, நான் பாதுகாவலன் என்ற பெயரில் டுவிட்டரில் வீடியோ வெளியிட்டு, பிரசாரத்தை துவங்கி உள்ளார். தொடர்ந்து டுவிட்டரில் தனது பெயரையும் "சவ்கிதார் (பாதுகாவலர்) மோடி" என மாற்றி உள்ளார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

காங்., பொதுச் செயலாளர் ஜோதிராத்ய சிந்தியா கூறுகையில், இவர்களை போல் காவலாளிகள் இருந்தால் நாட்டை யார் காப்பாற்றுவது? என கேள்வி எழுப்பி உள்ளார்.  
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், விவசாயிகளை அவமதிக்கும் பிரதமர் மோடி தன்னை விளம்பரப்படுத்த காலவாளி என்றார். நாட்டிற்கு தேவை பிரதம மந்திரி தான்; பிரசார மந்திரி இல்லை என குறிப்பிட்டுள்ளார். 

பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, அனைவரும் காவலாளியாக இருந்தால் யாரும் திருட மாட்டார்கள். மக்களை ஏமாற்றுபவர்களிடம் இருந்து அனைவரும் தங்களை காப்பாற்றிக் கொள்வார்கள் என டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். திரிணாமுல் காங் டெரிக் ஓ பிரையன், பிரதமருக்கு 6 விஷயங்கள் என கூறி நிரவ் மோடி, பணமதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு இது தான் நீங்கள் பாதுகாப்பதா என கேட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்