Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்து மதம் குறித்து அவதூறு: திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் கைது

ஜுலை 31, 2020 07:09

சென்னை: இந்து கடவுள்களை அவதூறாக பேசிய வழக்கில் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரனை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தனர்.
இயக்குனர் வேலு பிரபாகரன் எப்போதும் வக்கிரமான, ஆபாசங்களை முன்வைத்தே படம் எடுப்பவர். அதன்மூலம் ஏதாவது சர்ச்சை ஏற்படாதா, படம் ஓடாதா என்று எதிர்பார்ப்பவர். இன்னும் சொல்லப்போனால், அவர் கதையை நம்புவதை விட சதையை நம்புபவர். இப்படியே தானும் ஒரு இயக்குனர் என்று சொல்லிக்கொண்டு சினிமாவில் ஓட்டிக் கொண்டு இருக்கிறார். ஈ.வெ.ரா., கொள்கையில் பிடிப்பு உள்ளவராகவும் தன்னை காட்டிக் கொள்வார். மேலும், இந்து மத கடவுள்களையும், மத நம்பிக்கைகளையும் எப்போதும் கேவலமாக பேசுபவர்.

சமயம் கிடைக்கும்போதெல்லாம் இந்து மதத்தை பற்றி கேவலமாக பேசி வந்த இவர், கந்த சஷ்டி கவசத்தை இழிப்படுத்திய கருப்பர் கூட்டம் யு-டியூப் சேனலின் சுரேந்தரை ஆதரித்தும், இந்து மதத்தை மீண்டும் கேவலமாக பேசியும் பேட்டி கொடுத்துள்ளார். இதனால் இவர் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் மகேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ‛யு-டியூப் சேனலில் ஒரு பேட்டியில் வேலு பிரபாகரன் இந்துக்கள் பற்றியும், இந்து மதம் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,' என்று அந்த புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.

இந்த மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆபாசப்பட இயக்குனர் வேலு பிரபாகரனை கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்