Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் முழுவதும் பரவலாக மழை

ஜுலை 29, 2020 07:39

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று (ஜூலை 28) சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில், கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், பெரம்பூர், கோட்டூர்புரம், அடையாறு, பெசன்ட் நகர், கே.கே.நகர், வேளச்சேரி, போரூர், வளரசரவாக்கம், ராமாபுரம் பகுதிகளில் கனமழை பெய்தது.

திருச்சி மாவட்டத்தில் லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் சுற்று வட்டார பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வரம்பியம், கச்சனம், ஆலத்தம்பாடி, வேளூர், பல்லங்கோவில், கட்டிமேடு, ஆதிரெங்கம் விட்டுகட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நாகை மாவட்டத்தின் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி, திருக்குவளை, கீழ்வேளூர், கீழையூர், திருமருகள், மீனம்ம நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டையில் 20 மி.மீ மழை பதிவானது. மேலும், மாவட்டத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளான கோபி, பெருந்துறை, பவானி, கொடுமுடி, கவுந்தபாடி, எலந்தகுட்டை, மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளும் பரவலாக மழை பெய்தது. கன்னியாகுமரியில் கோதையார், பேச்சிப்பாறை, கடையால், குலசேகரம், குழித்துறை, மார்த்தாண்டம், களியக்காவிளை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கன மழை பெய்தது. இதுபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்தது.

தலைப்புச்செய்திகள்