Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி., இழப்பீடு தொகை ரூ. 1,65,302 கோடி : விடுவித்தது மத்திய அரசு

ஜுலை 28, 2020 06:40

புதுடெல்லி: மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஜி.எஸ்.டி., இழப்பீடாக, ரூ. 1,65,302 கோடி ஜி.எஸ்.டி., விடுவித்தது.

கடந்த, 2017, ஜூலை,1ல், ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்பால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பு, ஐந்து ஆண்டுகளுக்கு ஈடு செய்யப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, நடப்பு, 2019-20- ம் நிதியாண்டில், முதல்கட்டமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 15 ஆயிரத்து, 340 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மாநிலங்களுக்கு ரூ.1,65,302 கோடி ஜி.எஸ்.டி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இதில் தமிழகத்துக்கு மட்டும் ரூ. 12,305 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரிக்கு ரூ. 1057கோடி ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு வழங்கியது. இந்த இழப்பீட்டுத் தொகையானது கொரோனா பாதிப்புகள் இருக்கும் சமயத்தில் தக்க சமயத்தில் மாநில அரசுகளுக்குக் கிடைத்துள்ளது.

தலைப்புச்செய்திகள்