Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆயஷ்மான் பாரத் திட்டம் மூலம் கூடுதலாக 13,000 சுகாதார மையங்கள் அமைப்பு: மத்திய அரசு

ஜுலை 28, 2020 06:14

புதுடெல்லி: நாடு முழுவதும் ஆயஷ்மான் பாரத் திட்டம் மூலம் கூடுதலாக 13,000 சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இம்மையங்கள் மூலம் சமூக தொற்றில்லாத நோய்களான நீரிழிவு, ரத்த அழுத்தம், கேன்சர் போன்ற நோய்கள் பரிசோதனை செய்யப்படுகின்றன.

இன்றைய கொரோனா சூழலில் கிராமப் புறங்களில் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கூடுதலாக இந்த ஆண்டு மட்டும் (ஜனவரி முதல் ஜூலை வரை) 13,657 சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏற்கனவே இருந்த சுகாதார மையங்களைச் சேர்த்து தற்போது நாடு முழுவதும் 43,000 சுகாதார மையங்கள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வாரத்தில் மட்டும் 3,83 லட்சம் பேரிடம் ரத்த அழுத்தம், 3,14 லட்சம் பேரிடம் நீரிழிவு, 1.15 பேரிடம் கேன்சர் மற்றும் 45,000 பேரிடம் மார்பக புற்றுநோய்கள் கண்டறியப்பட்டன. இது தவிர கர்ப்பிணிகளுக்கும் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. பரிசோதனைகள் மட்டுமின்றி சென்ற வாரத்தில் 32,000 யோகா நிகழ்ச்சிகள் சுகாதார நலவாழ்வு மையங்கள் சார்பாக நடத்தப்பட்டுள்ளன.

இதுவரை 14.24 லட்சம் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார மையங்கள் மூலம் 44 லட்சத்திற்கும் அதிக எண்ணிக்கையில் மக்கள் பலன் அடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்