Wednesday, 5th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்: மம்தா வேண்டுகோள்

ஜுலை 28, 2020 06:02

கோல்கத்தா: மத்திய அரசு மேற்கு வங்கத்திற்கு நிலுவையில் உள்ள நிதி உதவியை வழங்க வேண்டும் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜூலை 27) நாட்டின் மஹாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலம், உ.பி., போன்ற பல்வேறு பகுதிகளில் ஐ.சி.எம்.ஆர்., உயர்திறன் ஆய்வகங்களை பிரதமர் மோடி காணொளிகாட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொரோனாவை எதிர்த்து போராட மத்திய அரசு மேற்கு வங்கத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மம்தா மேலும் கூறியதாவது, ' மாநிலத்தில் சமீபத்தில் வீசிய அம்பான் புயலால், நிதி முழுவதும் செலவழிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு புயல் நிவாரணத்திற்கென ரூ 53,000 கோடி இன்னும் தர வேண்டியதுள்ளது. எங்கள் மாநிலத்தில் புயல் நிவாரணத்திற்காக எங்கள் நிதி அனைத்தையும் செலவழிக்கும் போது எங்களால் எப்படி கொரோனாவை எதிர்த்து போராட முடியும். எனவே மத்திய அரசு நிதி நிலுவையை மேற்கு வங்கத்திற்கு வழங்க வேண்டும்' இவ்வாறு மம்தா பேசினார்.

தலைப்புச்செய்திகள்