Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பஞ்சாப் மாநிலத்தில் 70 ஆயிரம் போலி ஓய்வூதியர்கள் கண்டுபிடிப்பு

ஜுலை 27, 2020 07:12

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 70 ஆயிரம் போலி ஓய்வூதியர்கள் ரூ.162.35 கோடி அளவிற்கு மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டில் இருந்து 58 வயதான பெண்கள், 65 வயது பூர்த்தியடைந்த ஆண்கள் மற்றும் ஆதரவற்ற, ஊனமுற்றோருக்கு மாநில அரசு சார்பில் ரூ.750 வரையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஓய்வூதிய பணம் அவரவர்களின் வங்கி கணக்கிற்கு நேரிடையாக செலுத்தப்பட்டு வந்தது. 2017-ல் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் காங்கிரஸ் கட்சியும் இந்த ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்தது.

இந்நிலையில் மோகா மாவட்டத்தை சேர்ந்த 65 வயதான குர்தேஜ் என்பவருக்கு கடந்த மே மாதம் முதல் ஓய்வூதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வில்லை. மேலும் சங்ரூர்,பதிந்தா, அமிர்தசரஸ்,முக்த்சர் மற்றும் மான்சா உள்ளிட்ட மாவட்டங்களிலும் உரிய பயனாளிகளுக்கு பணம் சென்று சேர வில்லை என மாநில அரசுக்கு புகார் வந்து கொண்டிருந்தது.

இதனையடுத்து மாநில அரசு இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சமூகபாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் போலி சான்றிதழ் கொடுத்து சுமார் 70, ஆயிரம் போலிஒய்வூதியர்கள் சுமார் ரூ.162.35 கோடி அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து எதர்கட்சிகளான ஆம்ஆத்மி தவறும் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது அகாலி தள கட்சியின் செய்திதொடர்பாளர் தல்ஜித் சீமா அரசின் நடவடிக்கையின் மூலம் 70 ஆயிரம் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் போகும் என்று கூறிஉள்ளார்.

எதிர்கட்சிகளின் புகார்களுக்குபதில் அளித்த மாநில முதல்வர் அமரீந்தர்சிங் 2017-ல் காங்., ஆட்சிக்கு வந்த பின்னர் தகுதியான பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். காங்., அரசு 6 லட்சம் உண்மையான பயனாளிகளைசேர்த்துள்ளது என கூறினார். மேலும் அரசியல் கட்சிகள் சுயநலமாகி தங்களின் சொந்த நலன்களை மேம்படுத்துவதற்காக தவறான செயல்களில் ஈடுபடும் போது இவ்வாறு நடக்கின்றன என கூறினார்.

தலைப்புச்செய்திகள்