Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை

ஜுலை 25, 2020 06:14

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியிடம் 4.5 மணி நேரம் விசாரணை நடந்தது. 100க்கு அதிகமான கேள்விகள் நீதிபதிகளால் கேட்கப்பட்டது.

உ.பி., மாநிலம் அயோத்தியில், 1992ல், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட, 32 பேருக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, லக்னோவில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று(ஜூலை 24) ஆஜராகி, வாக்குமூலம் பதிவு செய்தார். அவரிடம் சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதிகள் சுமார் 4.5 மணி நேரம் விசாரணை நடத்தினர். காலை 11 மணி முதல் 3.30 மணி வரை, 100க்கும் அதிகமான கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர். அவர் மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.

தலைப்புச்செய்திகள்