Thursday, 23rd May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவில் இறந்தவருக்கு இறுதி சடங்கு செய்த பத்திரிகையாளர்கள்

ஜுலை 24, 2020 07:28

புவனேஷ்வர்: ஒடிசாவில் கொரோனாவால் இறந்த ஒய்வு பெற்ற ஆசிரியர் உடலை இறுதி சடங்கிற்கு எடுத்துச்செல்ல உறவினர், அக்கம்பக்கத்தினர் தயங்கியதால், 4 பத்திரிகையாளர்கள் உடலை எடுத்துச்சென்று இறுதி சடங்கு செய்த சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் ஷர்கார்க் கிராமத்தில் வசித்து வந்தவர் பீந்தாம்பர் பாதே, ஒய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், வேறு நோய் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். வெளிநாட்டில் வசிக்கும் இவரது மகன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.எனினும் மகன்கள் உடனே இந்தியா வரவாய்ப்பில்லை.

உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் , இறந்த ஒய்வு ஆசிரியர் உடலை இறுதிசடங்கிற்கு எடுத்துச்செல்ல தயங்கினர். தங்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாக உடல் அருகே செல்லவும் மறுத்தனர்.

இதையறிந்த அஜித் பாண்டா, பாலாஜி பிரதான், மெகநாத் தாஸ், ஷங்கர் பிரதான் ஆகிய நான்கு பத்திரிகையாளர்கள் , தாங்களாகவே முன்வந்து, பி.பி.ஐ. எனப்படும் தனிமனித பாதுகாப்பு கவச உடையுடன் ஆம்புலனசை வரவழைத்து ஆசிரியர் உடலை எடுத்துச்சென்று இறுதி சடங்கு செய்து உடலை தகனம் செய்தனர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

தலைப்புச்செய்திகள்