Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போலி ரசீது மோசடி; பெரியார் பல்கலை., டீன் மீண்டும் சஸ்பெண்ட்

ஜுலை 24, 2020 06:27

சேலம்:பெரியார் பல்கலையில், போலி ரசீது மோசடியில் சிக்கிய, 'டீன்' கிருஷ்ணகுமார், மீண்டும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

சேலம், பெரியார் பல்கலை, அறிவியல் துறை, 'டீன்' பதவி வகித்தவர், பேராசிரியர் கிருஷ்ணகுமார், 60. இவர், இயற்பியல் துறைத் தலைவராக இருந்தபோது, ஆய்வு கூடத்துக்கு, 'ஸ்டேஷனரி' பொருட்கள் வாங்கியதாக சமர்ப்பித்த ரசீதுகள் போலி என, 2013ல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, 2013 செப்., 6ல், கிருஷ்ணகுமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். பின், அது ரத்து செய்யப்பட்டது. ஆயினும், அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், முன்ஜாமின் வாங்கியவர், பதவி உயர்வு பெற்று, அறிவியல் துறை டீனாக பதவி வகித்தார்.வரும், 31ல், கிருஷ்ணகுமார் ஓய்வு பெற இருந்தார். ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, துணைவேந்தர் குழந்தைவேல் நேற்று உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்