Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போலீஸ் நிலையத்தில் விசாரிக்கப்பட்ட நபர் மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் சஸ்பெண்ட்

ஜுலை 24, 2020 05:54

கோல்கத்தா: திருட்டு புகாரின் பேரில் போலீசாரால் விசாரிக்கப்பட்ட நபர் மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கூறப்படுவதாவது: மேற்கு வங்க மாநிலம் லோக்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியான ரூபோஷ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சவுவிக் காராய் . இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சிவரன் கோராய். இவரது கடையில் இருந்து சவுவிக் காராய் பணத்தை திருடியதாக லோக்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் சவுவிக் காராயை கைது செய்த போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பாளர் ரமேஷ்மொண்டல் மற்றும் அதிகசாரி சரோஜ் கோஷ் ஆகியோர் தமிழகதத்தின் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரித்ததை போன்று விசாரித்துள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் சவுவிக் விடுவிக்கப்பட்டார். வீட்டிற்கு வந்த சவுவிக் காராய் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

சவுவிக் காராய் தந்தை நரு கோபால் கூறியதாவது: எனது மகன் குஜராத் மாநிலத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தான். ஊரடங்கு காரணமாக ஒரு மாதத்திற்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்த அவன் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார். தற்கொலை செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டை சேர்ந்த சிவரன் கோராய் அளித் புகாரின் பேரில் சவுவிக் காராயை போலீசார் அழைத்து சென்றனர். அதன் பின்னர் எனது மகன் தற்கொலை செய்து கொண்டான். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே விசாரணை கைதியின் தற்கொாலை சம்பவத்திற்கு காரணமான லோக்பூர் போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பாளரான ரமேஷ் மொண்டல் கடமையில் இருந்து விடுவிக்கப்பட்டார் எனவும், மற்றொரு அதிகாரி சரோஜ் கோஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என போலீஸ் டி.எஸ்.பி., ஷியாம் சிங்தெரிவித்துள்ளார். மேலும் இருவர் மீதான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என கூறினார்.

தலைப்புச்செய்திகள்