Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதல்வர் அறிவிப்பு

ஜுலை 23, 2020 07:41

சென்னை: கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கலை , அறிவியல் இளநிலை படிப்பில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும், முதுநிலை படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.

பாலிடெக்னிக் மாணவர்களுக்கான பட்டய தேர்வும் ரத்து செய்யப்படுகிறது
பி.இ., படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும், எம்.இ., மாணவர்களுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.

எம்.சி.ஏ., படிக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்