Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில், கோவாக்சின் பரிசோதனை துவக்கம்

ஜுலை 22, 2020 06:35

சென்னை : தமிழகத்தில், 'கோவாக்சின்' தடுப்பு மருந்து பரிசோதனை, சென்னையை அடுத்த, காட்டாங்கொளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரியில் துவங்கியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, ஐதராபாதில் செயல்படும், 'பாரத் பயோடெக்' நிறுவனம், கொரோனாவை தடுக்கும் மருந்தை கண்டறிவதில், இறுதி நிலையை எட்டியுள்ளது.மனிதர்களுக்கு மருந்தை அளித்து, பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இந்த மருந்து, ஆக., 15க்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எடுத்து வர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதற்காக, டில்லி, பீஹார், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளுக்கு, இறுதி கட்ட பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், காட்டங்கொளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரியில் பரிசோதனை நடத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, தன்னார்வலர்கள், 50 முதல், 100 பேருக்கு, மருந்தை செலுத்தி, பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து, எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி, முதல்வர் சுந்தரம் கூறியதாவது: கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை துவங்குவதற்காக, தகுதியான தன்னார்வலர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டோம். பரிசோதனையில் பங்கேற்க, பல்வேறு நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.அவர்களின் உடல் நலம் குறித்த, மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. இந்த பரிசோதனை முடிந்தபின், அவர்களது உடலில் தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது. இதுதொடர்பான விபரங்கள் அனைத்தையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் தெரிவித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்