Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2021-ல் மம்தா மீண்டும் முதல்வராக பதவியேற்க மாட்டார்: பா.ஜ.,தலைவர் உறுதி

ஜுலை 22, 2020 06:00

கோல்கத்தா: மே.வங்கத்தில் மம்தா அடுத்த ஆண்டு முதல்வராக சத்தியபிரமாணம் எடுத்து கொள்ள மாட்டார் என மே.வங்க மாநில பா.ஜ., தலைவர் திலீப் கோஷ் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: பேரணி ஒன்றில் மம்தா பேசிய பேச்சில் 95 சதவீதம் பா.ஜ.,வை பற்றியே உள்ளது. இது அவர் பா.ஜ.,வை கண்டு பயப்படுவதையே காட்டுகிறது . இதற்காகவே தன்னுடைய கூட்டணியில் சேருமாறு அனைத்து கட்சிகளையும் அழைத்து கொண்டிருக்கிறார்.

மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் போது அவர் மீண்டும் முதல்வராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள முடியாது.

கடந்த 2019-ல் நடந்த மக்களவைக்கான தேர்தலின் போது திரிணமுல் காங்கிரஸ் 42 இடங்களை பிடிக்கும் என கூறினர். ஆனால் பா.ஜ.,18 இடங்களை பிடித்தது. 2019 -ல் டி.எம்.சி.,யின் ஓட்டுக்கள் பாதியாக குறையும், 2021 ம் ஆண்டில் நடைபெறும் தேர்தலில் டி.எம்.சி., ஓட்டுக்கள் காணாமல் போய்விடும். இவ்வாறு திலீப்கோஷ் கூறினார்.

முன்னதாக பேரணி ஒன்றில் கலந்து கொண்ட மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தில் மீண்டும் டி.எம்.சி., ஆட்சியை தக்கவைத்து கொள்ளும். சட்டசபை தேர்தலில் பா.ஜ., காணாமல் போகும். அந்த தேர்தலில் பா.ஜ.,வை மாநிலத்தில் இருந்து விரட்டுவோம். அடுத்த தேர்தல் மாநிலத்திற்கும் ,நாட்டிற்கும் ஒரு புதிய திசையை காண்பிக்கும் என பேசி இருந்தார்.

தலைப்புச்செய்திகள்