Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

ஜுலை 18, 2020 12:24

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் திடீர் ஆய்வு செய்தார். அதன்பின் மரக்கன்று நட்டு வைத்து போலீசாருக்கு கொரோனா குறித்து அறிவுரை வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட, காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட, மணிவண்ணன், பாளையங்கோட்டையில் உள்ள, மாவட்ட ஆயுதப்படையில், திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுப்பணிகளை முறையாக, முடித்துக் கொண்டபின், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்,  ஆயதப்படை மைதானத்தில், சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடும் வகையில், பயன்தரும் மரக்கன்றுகளை நட்டார்.

தொடர்ந்து, ஆயுதப்படை போலீசார் மத்தியில் மணிவண்ணன் பேசுகையில், " உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து, ஒவ்வொருவரும் தங்களைப்  பாதுகாத்திட, அதற்கான விதிமுறைகளைக் கண்டிப்பாக, பின்பற்றி நடந்திடல் வேண்டும்! குறிப்பாக, கைகளை அவ்வப்போது கழுவி, எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கையுறைகள் மற்றும் முகக்கவசங்களை தவறாமல், அணிய வேண்டும். தங்களுடைய இருப்பிடங்களில், அன்றாடம் பிளிச்சிங் பவுடர் தூவி, கிருமி நாசினியும் தெளிக்க வேண்டும். தொற்று பரவாதவாறு, கவனமாக தங்களுடைய பணிகளில், ஈடுபடுதல் மிகவும் அவசியம். இவ்வாறு அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சிசில், ஆயுதப்படை ஆய்வாளர் மகேசுவரி ஆகியோர் உட்பட, திரளான ஆயுதப்படை போலீசாரும், கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்