Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊழலா?: கிராம பெண்கள் பஞ். அலுவலகம் முற்றுகை

ஜுன் 25, 2020 10:51

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சுப்பையாபுரம் கிராம ஊராட்சியில் நீண்ட நாட்களாக 80 ரூபாய் சம்பளத்தை வழங்கியதாக பணியாளர்களும், பொதுமக்களும், விவசாயிகளும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சுப்பையாபுரம் கிராம பஞ்சாயத்தில் அருணாசலபுரத்தில் பணி செய்யும் பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த உதியத்தை வழங்காமல் 80 ரூபாய் சம்பளம் நீண்ட நாட்களாக பணியாளர்களுக்கு வழங்கியுள்ளனர்.

உயரதிகாரிகள்  கவனக்குறைவே இதுபோன்ற மோசடிகள் நடை பெறுவதற்க்கு காரணம் என பணியாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். வெளியூரில் வசிக்கும் நபர்களின் பெயர்களில் வேலை செய்தாகவும் ஒரு சில பணிகள் முடியாத பணிகளை முடிந்ததாகவும் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளத்தை மோசடி செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 15ம் தேதி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம், விக்கிரமராஜா மற்றும் புவேனஸ்வரி, பாக்கியத்தாய் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் சார்பாகவும் புகார் மனு அளித்துள்ளனர்.

எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. உடனடியாக மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராம ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளையும் தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் நடந்த மோசடி நடைபெற்றதை களஆய்வு மற்றும் தணிக்கை செய்தும் பாதிக்கப்பட்ட பயணாளிகளுக்கு இதுவரையிலும் நிலுவையிலுள்ள சம்பளத்தை உடனடியாக மீட்டுத்தரக் வேண்டும்.

எங்களுக்கு முழுமையான சம்பளத்தை வழங்கிட வேண்டும்.  குறைந்த சம்பளத்தை வழங்கி மோசடி செய்த அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம்  துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஞ்சாயத்து அலுவலகம் முன் பெண்கள், விவாசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைப்புச்செய்திகள்