Friday, 24th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிஎம் கேர்ஸ் நிதி மூலம், 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

ஜுன் 23, 2020 07:58

புதுடெல்லி: கொரோனா நிவாரண நிதிக்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதி மூலம் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: பிஎம் கேர்ஸ் நிதி மூலம், 'மேட் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரித்து கொரோனா சிறப்பு மருத்துவமனைகளுக்கு வழங்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 30 ஆயிரம் வென்டிலேட்டர்கள் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்பட உள்ளது. எஞ்சிய 20 ஆயிரத்தில் அக்வா ஹெல்த்கேர் 10 ஆயிரம், ஏஎம்டிஇசட் பேசிக் 5,650, ஏஎம்டி இசட் ஹை என்ட் 4000, அலைட் மெடிக்கல் 350 வென்டிலேட்டர்கள் தயாரிக்க உள்ளன.

தற்போது வரை 2,923 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு, அதில் 1,340 மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கப்பட்டு விட்டது. மஹாராஷ்டிராவிற்கு 275, டில்லிக்கு 275, குஜராத்திற்கு 175, பீஹாருக்கு 100, கர்நாடகாவிற்கு 90, ராஜஸ்தானுக்கு 75 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜூன் இறுதிக்குள் 14 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரித்து மாநிலங்களுக்கு வழங்கப்படும்.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக மாநில அரசுகளுக்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு, மருத்துவ வசதி, போக்குவரத்து செலவுகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. அதில், மஹாராஷ்டிராவிற்கு 181 கோடி, உ.பி.,க்கு 101 கோடி, தமிழகத்திற்கு 83 கோடி, குஜராத்திற்கு 66கோடி டில்லிக்கு 55 கோடி, மேற்கு வங்கத்திற்கு 53 கோடி, பீஹாருக்கு 51 கோடி, ம.பி.,க்கு 50 கோடி, ராஜஸ்தானுக்கு 50 கோடி, கர்நாடகாவிற்கு 34 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்