Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் இருந்து கர்நாடகா செல்வோருக்கு 3 நாள் கட்டாய தனிமை: அரசு உத்தரவு

ஜுன் 17, 2020 06:09

ஓசூர்; சென்னை உள்ளிட்ட சிவப்பு மண்டல பகுதிகளிலிருந்து வருவோரை, கர்நாடகா அரசு, கட்டாயமாக, மூன்று நாள் தனிமைப்படுத்தி வருகிறது.

தமிழகத்திலிருந்து, 'இ - பாஸ்' பெற்று, கர்நாடகா செல்வோரை, அம்மாநில எல்லையான அத்திப்பள்ளியில், போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். .இ - பாஸ் விபரங்கள் ஆய்வுக்கு பின், கையில் தனிமைப்படுத்துவதற்கான, 'சீல்' வைத்த பின், கர்நாடகாவுக்குள் அனுமதிக்கின்றனர். தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. இந்த நான்கு மாவட்டங்கள் மற்றும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளிலிருந்து, கர்நாடகா மாநிலத்துக்கு வருவோரால், தங்கள் மாநிலத்தில் தொற்று பரவி விடக்கூடாது என, கர்நாடகா அரசு, தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்படி, தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் இருந்து வரும் மக்களை, அத்திப்பள்ளியில் தடுத்து, இ - பாஸ் விபரங்களை ஆய்வு செய்யும் போதே, 'தெர்மல் ஸ்கேனர்' பரிசோதனை செய்து, மூன்று நாள் கட்டாய தனிமையில் வைக்கின்றனர். அதற்கு ஆகும் செலவை, சம்பந்தப்பட்டோரே செலுத்த வேண்டும்.மூன்று நாள் தனிமை முடிந்த பின், வீடுகளில் ஏழு நாள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப் படுகின்றனர். மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு சென்றால், இ - பாஸ் சோதனை செய்யும் இடத்திலுள்ள, டாக்டர்கள் குழுவிடம் அனுமதி பெற, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அத்திப்பள்ளியில் நடக்கும் தீவிர வாகன சோதனையால், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 2 கி.மீ.,க்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

தலைப்புச்செய்திகள்