Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாகிஸ்தானில் இரண்டு இந்திய தூதரக அதிகாரிகள் மாயம்

ஜுன் 15, 2020 08:25

புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகள் இன்று(ஜூன் 15) காலை 8 மணி முதல் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, பாகிஸ்தான் அரசிடம், இந்திய தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசா பிரிவில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகள் உளவு பார்த்த போது சிக்கினர். இதனையடுத்து அவர்கள் இருவரும் நாடு கடத்தப்பட்டனர். பாகிஸ்தானில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகள் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர் இதற்கு இந்திய கடும் கண்டனம் தெரிவித்தது. இந்திய தூதரகத்தில் பணிபரியு்ம கவுரவ் அலுவாலியா என்ற பொறுப்பு அதிகாரியை ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்த ஒருவர் டூவிலரில் பின்தொடர்ந்தார். தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடையூறு ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தூதரகம் சார்பில் பாகிஸ்தான் அரசிடம் கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவது மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் இரு ஊழியர்கள் இன்று காலை முதல் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்