Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்ட நர்ஸ், மீண்டும் கொரோனாவால் பலி

ஜுன் 15, 2020 08:08

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த செவிலியர் ஒருவர், மீண்டும் கொரோனா பாதித்து உயிரிழந்தார்.

சென்னையில் கடந்த 2 மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்த 155 நர்ஸ்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில், அதிகபட்சமாக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 50 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 30 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை மொத்தம் 135 நர்ஸ்கள் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 56 வயதான செவிலியர் ஒருவருக்கு கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த அவர் மீண்டும் பணிக்கு திரும்பினார்.

தொடர்ந்து பணியாற்றிய அவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிடி ஸ்கேனில் கிரேடு 3 என்ற பாதிப்பு தெரிந்ததால் செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் கணவரும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்