Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் தொழில் துவங்க வாருங்கள்; ஐந்து நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்

ஜுன் 14, 2020 07:53

சென்னை : தமிழகத்தில், தொழில் துவங்க வரும்படி அழைப்பு விடுத்து, ஐந்து முன்னணி நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்திற்கு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, வெளிநாட்டு துாதர்களுடனான சந்திப்பு, சிறப்பு பணிக்குழு அமைப்பு என, பல்வேறு நடவடிக்கைகளை, அரசு எடுத்து
வருகிறது.தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து, ஐந்து பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களுக்கு, முதல்வர் கடிதம் எழுதி
வருகிறார்.

அந்த வகையில், 'கேட் ஸ்பேட்' நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் லிஸ்ப்ரேஸர்; 'பாசில்' குழுமத்தின் தலைவர் கோஸ்டா கார்ட்கோடிஸ்; 'நைக்' நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஜான்டான்ஹூ; 'அடிடாஸ் ஏஜி' நிறுவனத்தின், முதன்மை செயல் அலுவலர் காஸ்பர் ரோர்ஸ்டட் மற்றும் 'மேட்டல் இங்க்' நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர், யோனன் கிரைஸ் என, ஐந்து முன்னணி நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களுக்கு, முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து, இந்த கடிதம் எழுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில், புதிய முதலீடுகள் செய்வதில் உள்ள, சாதகமான அம்சங்கள், சிறப்பான தொழில் சூழல் ஆகியவற்றையும், முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், புதிய தொழில் முதலீடுகளுக்கு, தமிழக அரசு சிறப்பான ஆதரவை வழங்கும். அவர்களின் தேவைகளுக்கேற்ப, ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும், முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்