Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது: 8,884 பேர் பலி

ஜுன் 13, 2020 07:40

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 8,884 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 11,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 08 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 330 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 386 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் 4வது இடத்தில் இருக்கும் இந்தியா, 3வது இடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாநில வாரியாக பாதிப்பு விவரம்

மாநிலம்- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை- பலி
மஹாராஷ்டிரா - 1,01,141- 3,717
தமிழகம்- 40,698-367
டெல்லி -36,824-1,214
குஜராத்-22,527-1,415
உ.பி.,-12,616-365
ராஜஸ்தான்-12,068-272
ம.பி.,-10,443-440
மேற்கு வங்கம்- 10,244-451
கர்நாடகா-6,516-79
ஹரியானா-6,334-70
பீஹார்-6,103-36
ஆந்திரா -5,680-80
காஷ்மீர்-4,730-53
தெலுங்கானா-4,484-174
ஒடிசா-3,498-10
அசாம்-3,498-08
பஞ்சாப் 2,986-63
கேரளா-2,322-19
உத்தர்காண்ட்-1,724-21
ஜார்க்கண்ட்-1,617-08
சத்தீஸ்கர்-1,429-06
திரிபுரா-961-01
ஹிமாச்சல பிரதேசம்-486-0
கோவா-463-0
மணிப்பூர்-385-0
சண்டிகர்-334-05
லடாக்-239-01
புதுச்சேரி-157-2
நாகலாந்து-156-09
மிசோரம்-104-0

தலைப்புச்செய்திகள்