Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் இதுவரை 47 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: 2.56 லட்சம் பேருக்கு தொற்று

ஜுன் 08, 2020 06:44

புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை 47 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது வரை 2.46 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,929 ஆகவும் அதிகரித்துள்ளது. இதன் மூலம், உலகளவில் கொரோனாவினால் அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை 47 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக, ஐ.சி.எம்.ஆர்., தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 69 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்