Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால்தான், தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்: முதல்வர்

ஜுன் 07, 2020 07:45

சென்னை: மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

அப்போது முதல்வர் கூறியதாவது:-

 * வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும்

* தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்

* மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது

* மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்

* கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில்தான் அதிகம்

* கொரோனாவால் உயிரிழப்போரின் சதவிகிதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழகத்தில் தான் மிகக்குறைவு

* நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் அதிக சோதனை மையங்கள் உள்ளன

* நாள் ஒன்றுக்கு சராசரியாக 13 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்