Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்டாலின் தலைமையில் 31-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

மே 29, 2020 09:53

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

தி.மு.க. சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. சார்பில் வருகிற 31-ந்தேதி தேதி மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீட் இட ஒதுக்கீடு தொடர்பாகவும், கொரோனா தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு குறித்தும் ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்