Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் உட்பட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கர்நாடகாவுக்குள் நுழைய தடை

மே 29, 2020 06:41

பெங்களூரு: கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பஸ், ரயில், விமானம் வழியாக கர்நாடகாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மே. 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

கர்நாடகாவில் பரவியுள்ள கொரோனா வைரசிற்கு இதுவரை 2418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 பேர் பலியாகியுள்ளனர். அம்மாநில அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கர்நாடகா அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்தது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடுத்த 10 முதல் 15 நாட்கள் பஸ், ரயில், விமானம் வழியாக கர்நாடகா மாநிலத்திற்குள் நுழைய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்