Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பினராயி எதிர்ப்பது மோடியையா, அதானியையா?

மார்ச் 15, 2019 05:35

கேரளா: முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு, தொழில் துறைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், சமீப காலமாக, அங்கு, பல்வேறு தொழில் நிறுவனங்கள்,முதலீடுகளை குவிக்கத் துவங்கி உள்ளன.காங்., தலைமையிலான முந்தைய, ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு துவக்கிய பல திட்டங்களை நிறுத்தாமல், அவற்றை துரிதப்படுத்தி செயல்படுத்துவதால், கேரள அரசு மீது, தொழில் துறையினருக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.இந்நிலையில், கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையம் உட்பட, நான்கு சர்வதேச விமான நிலையங்களை, 50 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் பொறுப்பு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான, 'அதானி' குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

'கேரள மாநில தொழில் மேம்பாட்டு கழகம், ஒரு பயணிக்கு, 135 ரூபாய் செலவில், நிர்வாக பணிகளை மேற்கொள்வதாக ஒப்பந்த புள்ளி அளித்துள்ளபோது, 168 ரூபாய் கேட்டுள்ள, அதானி நிறுவனத்துக்கு ஒப்பந்த பணி தந்தது ஏன்?' என, பினராயி விஜயன் கேள்வி எழுப்பி உள்ளார்.தொழில் துறைக்கு ஆதரவாக செயல்படும் விஜயன், அதானி குழுமத்துக்கு எதிராக குரல் எழுப்பியது, பிரதமர், நரேந்திர மோடியை குறிவைத்துதான், என, இடது ஜனநாயக முன்னணி வட்டாரங்கள் கூறியுள்ளன 

 

தலைப்புச்செய்திகள்