Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெ., இல்லத்தை முதல்வரின் இல்லமாக மாற்றலாம்: சென்னை ஐகோர்ட்

மே 27, 2020 09:32

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 900 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி அ.தி.மு.க.,வைச் சேர்ந்த புகழேந்தி ,ஜானகிராமன் மனு தாக்கல் செய்தனர். மனுவை நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. விசாரணையின் போது ஜெ.,வின் சகோதரரின் மகள் தீபா , மகன் தீபக் ஆகியோரை வழக்கில் விசாரித்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ஜெ.,வின் சொத்துகளுக்கு வாரிசுகள் எனக்கூறி இருவர் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வருமான வரி பாக்கி உள்ளதா என்பதை அறிய வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை பிரிவும் வழக்கில் சேர்க்கப்பட்டு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்த வேண்டியுள்ளதால், ஜெ.,வின் சொத்துகள் சிலவற்றை முடக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை பதில் அளித்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம். ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம். மக்கள் பணத்தில் தனியார் சொத்துகளை வாங்கினால், முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும். இதனால், வேதா நிலையத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றுவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

ஜெ., சொத்துகள் மீது தீபா,தீபக், இரண்டாம் நிலை வாரிசுகள். அவர்களுக்கு சொத்தில் உரிமை உண்டு. ஜெ.,வின் சொத்துகளின் ஒரு பகுதியை அறக்கட்டளை கொண்டு நிர்வகிக்கலாம். இந்த பரிந்துரை குறித்து, எட்டு வாரங்களில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், புகழேந்தி, ஜானகிராமன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

தலைப்புச்செய்திகள்