Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில், ஊரடங்கின் நோக்கம் தோல்வியடைந்து விட்டது: ராகுல்

மே 26, 2020 08:06

புதுடெல்லி: இந்தியாவில், ஊரடங்கின் நோக்கம் மற்றும் குறிக்கோள் தோல்வியடைந்துள்ளது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

வீடியோ கான்பரன்சிங் முறையில் ராகுல் அளித்த பேட்டி:இந்தியாவில் மட்டும் தான், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீக்கப்படுகிறது. ஊரடங்கின் குறிக்கோள் மற்றும் நோக்கம் தோல்வியடைந்துள்ளது. ஊரடங்கு தோல்வியின் பாதிப்பை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. 21 நாளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என நம்மிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 60 நாட்களை கடந்தும் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஊரடங்கின் நோக்கமும் குறிக்கோளும் தோல்வியடைந்தது மிக தெளிவாக தெரிகிறது.

சிறு மற்றும் குறு தொழிலுக்கு பணம் தேவைப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் அது கொடுக்கப்படாதது கவலைக்குரியது. ஊரடங்கில் இருந்து நாம் என்ன எதிர்பார்த்தோமோ அது கிடைக்கவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசின் திட்டம் என்ன?

பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கவும், நிதியுதவி அளிக்கவும், சிறு குறு தொழிலதிபர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இல்லையென்றால், பெரிய இழப்பு ஏற்படும். நாட்டின் ஆன்மா மற்றும் பலமாக உள்ள ஏழை மக்களை நாம் பாதுகாக்க வேண்டும். நம்மை பற்றி மற்ற நாடுகள் என்ன நினைக்கின்றன என்பது பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. நாட்டின் ஆன்மா மற்றும் பலத்தை பாதுகாக்க வேண்டும். அரசு அறிவித்தது அனைத்தும் கடன் திட்டங்களாக தான் இருக்கிறது. மக்களுக்கு உடனடிதேவை நிதியுதவி தான். கடனுதவி இல்லை.

எல்லையில் என்ன பிரச்னை, அங்கு என்னநடந்தது, எப்படி நடந்தது என்பது குறித்து அரசு தெளிவாக விளக்க வேண்டும். தற்போது யாருக்கும் தெளிவாக எதுவும் தெரியவில்லை. நேபாளம், லடாக்கில் என்ன நடந்தது எப்படி என்பது குறித்தும், தெளிவாக விளக்க வேண்டும். எங்கு போய் வேலை பார்க்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதனை மாநில அரசுகள் முடிவு செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்