Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனுமதி இல்லாமல் போட்டோவை பயன்படுத்துவதா?: நடிகை அனுஷ்கா சர்மா மீது பா.ஜ., எம்.எல்.ஏ புகார்!

மே 25, 2020 08:50

மும்பை: அனுமதி இல்லாமல் தனது போட்டோவை பயன்படுத்தியதாக நடிகை அனுஷ்கா மீது பா.ஜ.க. எம்.எல்.ஏ புகார் செய்துள்ளார்.

பிரபல நடிகை அனுஷ்கா சர்மா, பாட்டியாலா ஹவுஸ், பிகே, பாம்பே வெல்வட், சுல்தான், சஞ்சு உட்பட பல இந்தி படங்களில் நடித்துள்ளார். நடிகை அனுஷ்கா சர்மா, கிளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சினிமா படங்களையும் தயாரித்து வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர், தனது நிறுவனம் மூலம் என்.எச்.10, பிலாரி, பரி ஆகிய படங்களை தயாரித்துள்ளார். அடுத்து கனேடா, புல்புல் ஆகிய படங்களை தயாரிக்க இருக்கிறது.

இந்நிலையில் அவர் பாதல் லோக் என்கிற வெப் தொடரை தயாரித்து உள்ளார். இதில் அவர் நடிக்கவில்லை. அவினாஷ் அருண் இயக்கும் இந்தத் தொடர் குற்றவியல் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகும்.
இந்தத் தொடர், அமேசான் பிரைமில் கடந்த 15ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் ஒரு காட்சியில், தங்கள் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாக கூர்கா சமூகத்தினர் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

பாதல் லோக் வெப் தொடரில், தேசிய நெடுஞ்சாலை திறப்பு விழா காட்சி ஒன்று இடம் பெறுகிறது. அதில் தனது அனுமதி பெறாமல், தனது போட்டோவை பயன்படுத்தி இருப்பதாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ, நந்தகிஷோர் குர்ஜார் புகாரில் தெரிவித்துள்ளார். அந்தக் காட்சியில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்குபெற்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.

இந்த தொடரில், இந்துக்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாகவும் வகுப்புவாத பரபரப்பை தூண்டும் விதமாக இருப்பதாகவும் இந்தியாவின் இமேஜை கெடுப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் நடிகை அனுஷ்கா சர்மா மீது, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்