Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மே 31 வரை விமான போக்குவரத்து இல்லை: ஏர் இந்தியா அறிவிப்பு

மே 18, 2020 07:16

புதுடெல்லி: 'உள்நாட்டு விமான போக்குவரத்தை மே 31ம் தேதி வரை துவக்கப் போவதில்லை' என 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சரக்கு விமான சேவைகளை தவிர்த்து உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகள் மார்ச் 25ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மத்திய அரசின் 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' மற்றும் 'ஏர் இந்தியா' விமானங்கள் மே 7 - 15ம் தேதி வரை பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்பட்டு அங்கு தவித்த தமிழர்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.

தற்போது பல்வேறு மாநிலங்களில் நான்காம் கட்டமாக இன்று முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் 'மே 31ம் தேதி வரை உள்நாட்டு விமான போக்குவரத்தை துவக்கப் போவதில்லை' என 'ஏர் இந்தியா' நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிறப்பு விமான சேவை மற்றும் சரக்கு விமான சேவைக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில் இந்தியாவில் உள்ள வெளிநாட்டினர் 'வந்தே பாரத்' திட்டத்தில் ஜூன் 3ம் தேதி வரை 'ஏர் இந்தியா' சிறப்பு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்