Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி: நிர்மலா

மே 16, 2020 12:23

புதுடெல்லி: போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தன்னிறைவு இந்தியா திட்டத்தில் 4வது கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பிரதமர் உரையாற்றிய பின்னர் நான்காவது கட்ட அறிவிப்பு வெளியிடப்படுகிறது. சுயசார்பு என்பது இந்தியாவை தனிமைபடுத்தி கொள்வதற்கான கொள்கை அல்ல. இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்மானமாக கொண்டது.போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.சர்வதேச சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவே பிரதமர் வகுத்திருக்கும்திட்டத்தின் அடிப்படை . இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கைகளில் சீர்திருத்தம் அவசியம்.பிற நாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கைகளில் சீர்திருத்தங்கள் தேவை.நிறைய துறைகளில் விதிமுறைகளில் பங்களிப்புகள் எளிமையாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

ஜிஎஸ்டி போன்ற முக்கியமான சீர்திருத்தங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். வளர்ந்து வரும் புதிய துறைகளை ஊக்கப்படுத்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.முதலீடுகளை ஈர்க்கும்திறனை கொண்டு மாநிலங்கள் தர வரிசைபடுத்தப்படும். தொழில் பூங்கா உருவாக்க 5 லட்சம் ஹெக்டேர் காலியிடம் கையிருப்பில் உள்ளது. நாடு முழுவதும் தொழில் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளை கட்டமைப்பை வலுப்படுத்த திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்