Thursday, 23rd May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவுக்கு எதிராக நேபாளத்தை துாண்டிவிடும் சீனா: ராணுவத் தளபதி காட்டம்

மே 16, 2020 08:00

புதுடெல்லி: இந்திய நேபாள எல்லையில் லிபுலேக் பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை குறித்து சிலரின் (சீனா) தூண்டுதலால் நேபாளம் எதிர்ப்பு தெரிவிப்பதாக, இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே, சீனாவை மறைமுக சாடினார்.

யாத்ரீகர்களுக்கு உதவும் வகையில் உத்தரகண்டின் லிபுலேக் பகுதியில் இருந்து திபெத்தில் உள்ள மானசரோவருக்கு 80 கிலோ மீட்டர் தூர சாலையை இந்தியா அமைத்தது. கடந்த 8ம் தேதி திறக்கப்பட்ட இந்த சாலை தங்களது எல்லைக்குள் வருவதாக நேபாள தூதர் கூறியிருந்தார். இது குறித்து டெல்லியில் உள் ராணுவக் கல்வி மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசிய ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே, சீனாவை மறைமுகமாக சாடினார். அவர் பேசியதாவது:

திபெத்தில் உள்ள புனிதத் தலமான கைலாஷ் மானசரோவர் செல்வதற்காக, உத்தராகண்ட்டில் இருந்து லிபுலேக் பகுதிக்கு செல்லும் இணைப்புச் சாலை கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது. நேபாள எல்லையை ஒட்டிய பகுதியில் கலி ஆற்றின் மேற்குப் பகுதியில் இந்த சாலையை அமைத்துள்ளோம். கலி ஆற்றின் கிழக்கு கரை பகுதி தங்களுக்கு சொந்தமானது என நேபாள தூதர் குறிப்பிட்டுள்ளார். அதில் எந்த சர்ச்சையும் இல்லை.

நாங்கள் உருவாக்கிய சாலை, உண்மையில் ஆற்றின் மேற்கே உள்ளது. பிறகு எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு சிலரின் தூண்டுதலால் இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினையை நேபாளம் எழுப்பியிருக்கலாம். அதற்கான சாத்தியங்களும் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்