Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க, சவுதிக்கு மருத்துவ பணியாளர்களை அனுப்ப இந்தியா அனுமதி

மே 15, 2020 06:10

புதுடெல்லி: கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தங்கள் நாட்டில் பணியாற்றி வந்த இந்திய மருத்துவ பணியாளர்களை திருப்பி அனுப்புமாறு சவுதி அரேபிய அரசு கோரியிருந்த நிலையில், 835 மருத்துவ பணியாளர்களை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. சில நாடுகளில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் அவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான மருத்துவ பணியாளர்கள் இல்லாமல் அவதிப்படுகின்றன. இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், மேற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, ‛கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் வகையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பற்காக, தங்கள் நாடுகளில் பணியாற்றி வந்த இந்திய மருத்துவ பணியாளர்கள், தற்போது இந்தியாவில் தங்கியுள்ளனர். அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்,' என கோரிக்கை விடுத்தனர்.

இதே கோரிக்கை சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சரும் முன்வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்திய டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 835 மருத்துவப் பணியாளர்களை சவுதி அரேபியாவிற்கு திரும்ப அனுப்ப அனுமதி அளித்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக சில மருத்துவ குழுவினர் மே 13ம் தேதி கொச்சியில் இருந்து விமானம் மூலம் சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றனர். அடுத்தகட்ட மருத்துவக் குழுவினர், மே 16, 20, 23 தேதிகளில் சிறப்பு விமானங்கள் மூலம் சவுதி அரேபியாவிற்கு அழைத்து செல்லப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்