Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாருதி சுசூகி நிறுவனம் 50% ஊழியர்களுடன் உற்பத்தியை தொடங்க ஆயத்தம்!

மே 13, 2020 10:06

புதுடெல்லி: மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் அதன் தொழிற்சாலைகளில் குறுகிய மாற்றங்களையும், அலுவலக ஊழியர்கள், விற்பனையாளர்கள் மற்றும் டீலர்ஷிப்களுக்கான கடுமையான பாதுகாப்புத் திட்டங்களையும் கொண்டிருக்கும். ஏனெனில் நாட்டில் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர் உற்பத்தியினை மறுதொடக்கம் செய்யத் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மாருதி அலுவலகங்கள் எந்த நேரத்திலும் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டிருக்கவில்லை என்றாலும், பொதுவாக கிருமி நீக்கம் செய்ய தொழில்சாலைகளில் மாற்றங்களுக்கு இடையே ஒரு மணி நேர இடைவெளி இருக்கும் என்றும் கூறியுள்ளது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒரு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த உற்பத்தியை தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் தொழிற்சாலை வாயில்கள், கேண்டீன்கள், வாட்டர் கூலர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மீட்டர் இடைவெளியினை பின்பற்றுமாறும் மாருதி சுசூகி அதன் ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அதே போல வீட்டிலிருந்து பயணிக்கும் போதும் ஊழியர்கள் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு ஒவ்வொரு ஊழியர்களும் பேஸ் மாஸ்க் மற்றும் சானிடைசர் உபயோகப்படுத்துவதும் கட்டாயம் என்றும் கூறியுள்ளது.

மாருதி சுசூகி மட்டும் அல்ல, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, டொயேட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்தியா, ஹீரோ மோட்டோர் கார்ப், ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ராயல் என்பீல்டு, டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற பல வாகன உற்பத்தியாளர்கள் இந்த மாதத்தில் தொழிற்சாலைகளை மீண்டும் திறந்துள்ளனர்.

பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் மத்திய அரசு வழிகாட்டுதல் மூலம் படிப்படியாக உற்பத்தியை தொடங்க அனுமதித்துள்ள நிலையில், மேற்கண்ட நிறுவனங்கள், பல கட்டுப்பாடுகளுடன் உற்பத்தியை  தொடங்கி வருகின்றன. ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துணைத் தலைவர் மிதுல் ஷா  கூறிதாவது:

பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் மீண்டும் உற்பத்தியினை தொடங்கியிருந்தாலும், அடுத்த இரண்டு மாதங்களில் தேவை 30% அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்றும் கூறியுள்ளதாக லைவ் மிண்ட் செய்திகள் கூறுகின்றன. டயர் 2 மற்றும் டயர் 3 விற்பனையாளர்களுக்கு ஊழியர்கள் கிடைப்பது பற்றாக்குறையாக இருப்பதால், நகரங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறுவதால் பிரச்சனை ஏற்படலாம். அதோடு அடுத்த சில மாதங்களில் உள்நாட்டு சந்தையில் குறிப்பிடத்தக்க தேவை இருக்காது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்