Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தியேட்டர்களை பின்னுக்குத் தள்ளும் ஓ.டி.டி: பல படங்கள் ரிலீசுக்கு ரெடி!

மே 13, 2020 09:54

மும்பை: கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பல தயாரிப்பு நிறுவனங்களையும், ஓ.டி.டி. தளங்களான அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஐடியுன்ஸ், ஹெச்.பி.ஓ. உள்ளிட்டவை அணுகி உள்ளன.

ஊரடங்கு உத்தரவு நீடித்துக் கொண்டே போனாலும், ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்தாலும் தியேட்டர்கள் முன் போல அரங்கு நிறைந்த காட்சிகளாக இருக்குமா? என்பது சந்தேகம் தான். பொதுமக்களும், குடும்பத்துடன் தியேட்டர்களுக்கு சென்று படங்களை பார்ப்பார்களா? என்பது கேள்விக் குறி தான். இதனால், பல புதிய படங்களை நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டு வருகின்றன.

பாலிவுட்டில் சுஜித் சர்கார் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாகி உள்ள 'குலாபோ சிட்டாபோ' படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் தியேட்டருக்கு முன்பாக ரிலீஸ் செய்ய வாங்கி இருக்கிறது. அதே போல ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடித்துள்ள 'லக்‌ஷ்மி பாம்' திரைப்படத்தை தயாரித்துள்ள ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தங்களின் சொந்த ஓ.டி.டி. தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.

மேலும், வித்யா பாலனின் ஷகுந்தலா தேவி - ஹியூமன் கம்ப்யூட்டர், புமி பெட்னேகரின் துர்காவதி, கரண் ஜோஹரின் கஞ்சன் சக்ஸேனா மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜூந்த் மற்று செர்ரே உள்ளிட்ட பல படங்களும் தியேட்டருக்கு முன்பாக ஆன்-லைனில் ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றன. பிரபல தயாரிப்பு நிறுவனமான டி- சீரிஸ் 2020ல் உருவாகும் தங்களின் அத்தனை படைப்புகளையும் நெட்பிளிக்ஸூக்கு எழுதி கொடுத்து விட்டது.

பெருமளவில் ரூ.20 முதல் ரூ.30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் சிறு பட்ஜெட் படங்களை  தற்போது இந்த ஆன்-லைன் ஸ்ட்ரீமிங் வெப்சைட்டுகள் டார்கெட் செய்து வருகின்றன. தயாரிப்பாளர்களுக்கும், போதுமான வசூல் இதன்மூலம் கிடைப்பதால், தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவில்லை என்றாலும், நஷ்டம் ஏதும் ஏற்படாது.

அதே நேரத்தில் '83', சூர்யவன்ஷி உள்ளிட்ட பெரிய திரைப்படங்களை தியேட்டரில் முதலில் ரிலீஸ் செய்தால், 100 கோடிக்கும் மேல் பட்ஜெட் போட்டு எடுக்கப்படும் படங்களுக்கு 300 முதல் 500 கோடி வசூல் கிடைக்கும்.
ஆனால், ஆன்-லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் அத்தனை பெரிய வசூல் சாத்தியமில்லாததால், பெரிய பட்ஜெட் படங்கள் தியேட்டர்கள் திறக்கும் நாளை எதிர்பார்த்து காத்து நிற்கின்றன. ஆன்-லைனில் நேரடியாக புதுப்படங்களை ரிலீஸ் செய்ய நாடு முழுவதும் தியேட்டர் ஓனர்களும் போராடி 
வரும் நிலையில், அதையும் மீறி பல படங்கள் விரைவிலேயே ஓ.டி.டி. தளங்களில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்