Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமரின் ஆராய்ச்சி கூட்டுறவு திட்டத்தில் ஆண்டுதோறும் 20 மாணவர்கள் சேர்ப்பு: திருச்சி என்.ஐ.டி. பெருமிதம்

மே 11, 2020 03:11

திருச்சி: “திருச்சி என்.ஐ.டி. கல்லூரியில் பிரதமரின் ஆராய்ச்சி கூட்டுறவு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 20 மாணவர்கள் சேர்க்கப்படுவது என்.ஐ.டி.க்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்,” என, அதன் இயக்குநர் மினிஷாஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:
இந்தியாவில் தலைசிறந்த ஆர்ய்ச்சி படிப்பு மாணவர்களை ஊக்குவிப்பதோடு அவர்களின் கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்தும் விதமாக கடந்த 2018-2019-ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் பிரதமரின் ஆராய்ச்சி கூட்டுறவு திட்டம் அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த திட்டம் ஐ.ஐ.டி. ஐ.ஐ.எஸ்.இ.ஆர். ஐ.ஐ.எஸ்.இ. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் திருச்சி என்.ஐ.டி. கல்லூரிக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது பெருமை அளிக்கிறது. இந்த திட்டத்தில் ஆண்டுதோறும் 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு முதல் இரு ஆண்டுகளுக்கு ரூ 70 ஆயிரமும் 3ம் ஆண்டுக்கு ரூ 75 ஆயிரமும் அடுத்த இரு ஆண்டுகளுக்கு ரூ.80 ஆயிரமும் மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்