Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாராஷ்டிராவில் சிக்கித்தவித்த தமிழக தொழிலாளர்கள் 962 பேர் திருச்சி வருகை

மே 10, 2020 03:03

திருச்சி: தமிழகத்தில் 34 மாவட்டங்களை சேர்ந்த 962 நபர்கள் மகாராஷ்டிரா மாநிலம் சோழாப்பூரில் பணிபுரிந்த தொழிலாளார்களை பந்தர்பூர் ரயில் நிலையத்திலிருந்து பயணிகளை சிறப்பு ரயில் மூலம் ஏற்றிக்கொண்டு திருச்சி ரயில்வே ஜங்சன் வந்து சேர்ந்தது. ரயிலில் வந்தவர்களை அந்தந்த மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 30 சிறப்பு பேருந்துகள் மூலம் சமூக இடைவெளி கடைபிடித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டு பயணிகளை அனுப்பி வைத்தார்.

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்ததாவது:

மத்திய, மாநில அரசுகள் புலம் பெயர்ந்து வேலை செய்யும், தொழிலாளர்களை அந்தந்த மாநிலத்தில் இருந்து  சொந்த ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தை சேர்ந்த  962 நபர்கள் மகாராஷ்டிரா மாநிலம் சோழாப்பூரில் பணி புரிந்த நபர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்று பதிவு செய்துள்ளனர். 

அதன்படி, விழுப்புரம் 79, கள்ளக்குறிச்சி 1, திருநெல்வேலி 62, திருவண்ணாமலை 57, மதுரை 55, கடலூர் 52, காஞ்சிபுரம் 50, சேலம் 49, நாமக்கல் 14, தஞ்சாவூர் 41, ராமநாதபுரம் 38, கன்னியாகுமரி 37, விருதுநகர் 33, சிவகங்கை 30, திருச்சி 29, திண்டுக்கல் 28, திருவள்ளூர் 27, திருப்பத்துார் 27, வேலூர் 26, அரியலூர் 24, புதுக்கோட்டை 24, கோயம்புத்துார் 22, ஈரோடு 9, கரூர் 7, திருப்பூர் 1, தேனி 22, திருவாரூர் 21, நாகப்பட்டினம் 17, தர்மபுரி 16, கிருஷ்ணகிரி 14, தூத்துக்குடி 16, நீலகிரி 13, பெரம்பலுார் 11, சென்னை 10 ஆகிய 34 மாவட்டங்களைச் சேர்ந்த 962 நபர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி ரயில்வே ஜங்சன் வந்தடைந்தனர். 

இவர்களை மாவட்ட நிர்வாகம் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 30 சிறப்பு பேருந்துகள் மூலம் சமூக இடைவெளியை கடைபிடித்து அனுப்பிவைக்கப்பட்டனர்.  இவர்களை அந்தந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்யப்படுவார்கள். மேலும், திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உணவு, குடிதண்ணீர், முகக்கவசம் ஆகியவை ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வடிவேல்பிரபு, வருவாய் 
கோட்டாட்சியர் விஸ்வநாதன், பொன்மலை உதவி ஆணையர் தயாநிதி மற்றும் பலர் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்